சம்பளம் தராததால் 50 கிங்பிஷர் விமானங்களை தரையிறக்கிய பைலட்டுகள்!

கிங்பிஷர் நிறுவனத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தினசரி இயக்கப்பட்டதைவிட ரத்து செய்யப்பட்ட விமானங்களே அதிகம் என்ற நிலைதான் உள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவை மிக மோசமான நிலையில் உள்ளது. தினசரி விமானங்கள் ரத்து என்பதுதான் கிங்பிஷர் அதிக அளவில் தரும் செய்தி.
உள்நாட்டில் 200 விமான சேவையைத் தருவதாக கூறும் கிங்பிஷர், நேற்று முன்தினம் 40 விமானங்களையும், நேற்று 10 விமானங்களையும் ரத்து செய்தது. அதற்கு முன் கணக்கில்லாமல் விமான சேவை ரத்துகள்.
இந்த நிலையில் சம்பளம் தரப்படாததால் விமானத்தை ஓட்ட முடியாது என்று கூறி 50 விமானங்களைத் தரையிறக்கிவிட்டனர் கிங்பிஷர் விமானிகள். இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
வழக்கம்போல, வருமான வரித்துறை வங்கிக் கணக்கை முடக்கிவிட்டதால்தான் இந்த நிலை என்று பழைய பல்லவியைப் பாடியுள்ளது கிங்பிஷர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பரில் ஒப்புக் கொண்டபடி, விமான நிலையங்களைப் பயன்படுத்த அன்றாடம் பணப் பட்டுவாடா செய்யும் விஷயத்திலும் கிங்பிஷர் ஒழுங்காக நடந்து கொள்ளாமல் நிறைய பாக்கி வைக்க ஆரம்பித்துள்ளதால், நிலைமை மோசமடைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கிங்பிஷர் விமானங்களை டேக் ஆஃப் செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே பயணிகள் கிங்பிஷர் விமான டிக்கெட்டுகளை வாங்க தயங்கும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications