ஈழப் போரின் காட்சிகள்.. வீடியோ காட்டப் போகிறதாம் இலங்கை ராணுவம்

விரைவில் இந்த வீடியோ ஒளிபரப்பாகுமாம். இப்போது இந்த வீடியோ தயாரிப்பு நிலையில் உள்ளதா அல்லது ஏற்கனவே ரெடியாகி விட்டதா என்பதை இந்த ஜெயசூரியா சொல்லவில்லை.
இந்த படத்தில் என்ன காட்டப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, விடுதலைப் புலிகளுடன் நடந்த கடைசிக் கட்டப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகள் இருக்கும் என்றார் ஜெயசூரியா.
இங்கிலாந்தின் சேனல் 4 டிவி நிறுவனம் இலங்கையில் நடந்த அப்பட்டமான இனப்படுகொலை தொடர்பாக கடந்த ஆண்டு ரத்தத்தை உறைய வைக்கும் வகையிலான போர்க்களக் காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை வெளியிட்டு உலக மக்களை அதிர வைத்தது. அடுத்து நாளை இன்னொரு வீடியோவை அது வெளியிடவுள்ளது. அதில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை கொடூரமாக கொன்ற காட்சிகள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியி்ல்தான் படம் காட்டப் போவதாக அறிவித்துள்ளது இலங்கை ராணுவம். இதுகுறித்து ராணுவத்தின் மீடியா செய்தித் தொடர்பாளர் வனிகசூரியா கூறுகையில், இந்த வீடியோ, இலங்கை ராணுவத்திற்கு எதிரான அவப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும். உண்மையில் என்ன நடந்தது என்பதும் இதன் மூலம் தெரிய வரும் என்றார்.
'படம்' காட்டட்டும், என்னதான் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்!












Click it and Unblock the Notifications