நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் சரத் பவார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் இன்று காலை லோக்சபாவில் மயங்கி விழுந்தார். தற்போது அவர் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இன்று காலை கூடிய லோக்சபாவில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் திடீர் என்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும், தனது காரிலேயே செல்வதாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ளது. ஆனால் அவர் சிரோமணி அகாலிதள தலைவர் பர்காஷ் சிங் பாதல் பஞ்சாப் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றது.

முன்னதாக பாதல் மற்றும் உத்தர பிரதேச முதல்வராகும் அகிலேஷ் ஆகியோரின் பதவியேற்பு விழாக்களில் கலந்து கொள்ளப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சிகள் எதிர்கட்சிகளுடன் உறவாடுவது பிடிக்கவில்லை என்பதை காங்கிரஸ் தெரிவித்ததைதையடுத்து மமதா பதவியேற்பு விழாக்களுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+