முதல்வராக இருந்த 5 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரி்த்த மாயாவதியின் சொத்து
டெல்லி: ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக பகுஜன்சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு ரூ.111.26 கோடி சொததுக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களையும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.52 கோடி சொத்து வைத்திருந்த அவர் தற்போது ரூ.111.26 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளார். அவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் தான் அவரது சொத்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
அவர் தனது மனுவில் வெளியிட்டுள்ள சொத்து விவரம் வருமாறு,
ரூ. 10.20 லட்சம் ரொக்கம், ரூ. 96.53 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், ரூ.9.32 லட்சம் மதிப்புள்ள 18.5 கிலோ வெள்ளி டின்னர் செட், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஓவியங்கள் என ரூ. 15.26 கோடி அசையும் சொத்துக்கள். ரூ.5,390 மதிப்புள்ள துப்பாக்கி. இது தவிர வங்கிக் கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட் தொகையும் அசையும் சொத்துக்களில் அடக்கம்.
அவருக்கு ரூ.96.38 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன. அதில் 9, மால் அவினியூ, லக்னோவில் உள்ள புதிய வீடு, டெல்லியில் கன்னாட் பிளேசில் 3,628 சதுர அடி மற்றும் 4,535 சதுர அடி வியாபார இடங்கள் அடக்கம். இந்த இரண்டு இடங்களின் தற்போதைய விலை ரூ. 9.39 கோடி மற்றும் ரூ. 9.45 கோடி ஆகும்.
டெல்லி சர்தார் பட்டேல் மார்க்கில் 42, 907 சதுர அடி நிலத்தில் ஒரு வீடு மற்றும் லக்னோவில் 71,282 சதுர அடியில் ஒரு வீடும் உள்ளது. அவர் 2010-11ம் ஆண்டில் ரூ.6.51 கோடி வருமான வரியாக செலுத்தியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் வென்ற பிறகு சமாஜ்வாடி கட்சி செய்யும் அட்டூழியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர ராஜ்யசபா பதவி உதவிகரமாக இருக்கும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications