ஈராக்கில் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்ததற்காக 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
பாக்தாத்: ஈராக்கில் மேற்கத்திய முறைப்படி இறுக்கமான ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து, நீளமான முடி வைத்திருந்த 14 இளைஞர்களை ஷியா தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.
ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதில் இருந்து அங்கு தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இஷ்டம் போல் பொதுமக்களை தாக்கியும், கொன்றும் வருகின்றனர். இந்நிலையில் எமோ என்ற மேற்கத்திய ஸ்டைல் ஈராக் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. எமோ என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒருவகை இசை. அந்த இசை ரசிகர்கள் இறுக்கமான ஜீன்ஸ், லோகோவுள்ள டி சர்ட் அணிவதோடு, நீளமான தலைமுடி அல்லது முள் மாதிரியான முடி வைத்திருப்பார்கள்.
இந்த கலாச்சாரம் ஷியா தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து இளைஞர்கள் யாரும் அந்த கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி இறுக்கமான ஜீன்ஸ், லோகோவுள்ள டி சர்ட் அணிந்து நீளமான தலைமுடி வைத்திருந்த 14 இளைஞர்களை ஷியா தீவிரவாதிகள் கல்லால் அடித்தே கொன்றுள்ளனர். அவர்களில் 9 பேர் சதார் நகரிலும், 3 பேர் கிழக்கு பாக்தாத்திலும், 2 பேர் மத்தியமார்க் பகுதியிலும் வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் எச்சரிக்கும் விதமாக 2 பெண்கள் உள்பட 6 பேரைத் தாக்கியுள்ளனர். அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய ஆடைகள் அணிபவர்கள் முதலில் எச்சரிக்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் ஒட்டப்படுகின்றது. அப்படியும் தொடர்ந்து நவநாகரீக ஆடைகள் அணிந்தால் அவர்களை கல்லால் அடித்து கொலை செய்கின்றனர். 3 வாரங்களில் 14 பேர் கொல்லப்பட்டும் இதுவரை யார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications