விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டைப் பாதைத் திட்டம் என்ன ஆச்சோ?!
சென்னை: தென் இந்தியாவின் முதலாவது ரயில் நிலையம் என்ற பெருமைக்குரிய ராயபுரம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்குவதற்கு உரிய ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் மிக முக்கியமான விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டைப் பாதைத் திட்டம் பற்றி ரயில்வே நிதிநிலை அறிக்கையில் எதுவுமே சொல்லப்படவில்லை.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே நிதிநிலை அறிக்கையின்படி 13 புதிய ரயில் தடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில், தமிழத்துக்கு ஒன்று கூட இல்லை. நாடு முழுவதும் 83 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் அரியலூர், கோவை, ராயபுரம், திருவெறும்பூர் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் ரயில் நிலையங்களாக ஆக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டைப் பாதை திட்டம் எந்த தேதியில் நிறைவடையும் என்பது குறித்து எந்த தகவலும் கூறப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த திட்டம் பலமுறை வலியுறுத்தப்பட்டும், எந்த முக்கியத்துவத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை.
அதே நேரத்தில் மதுரை - திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையில் மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதை அமைக்கப்படுவதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு இத்திட்டம் மிகப்பெரிய பலன் அளிக்கும்.
இதேபோல் கோவை - மேட்டுப்பாளையம், ஈரோடு - கரூர் - திருச்சி, கரூர் - திண்டுக்கல், நாகை - வேளாங்கண்ணி, காரைக்கால் துறைமுகம் - திருவாரூர் - தஞ்சாவூர் - திருச்சி ஆகியவற்றையும் மின்மயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மொத்தம் 31 ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகம் இடம் பெறவில்லை.
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் வழியாக ஆவடிக்கும் - கூடுவாஞ்சேரிக்கும் இடையில், புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம், மத்திய திட்டக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பரிசீலனையில் உள்ளது. மேலும் சென்னையில் கூடுதலாக 18 புறநகர் ரயில்கள் சேவைகள் அளிக்கப்படவுள்ளன. ராயபுரம் ரயில் நிலையத்தை 4வது முனையமாக்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை பறக்கும் ரயில் திட்டம் வேளச்சேரி-பரங்கிமலை இடையில், 2013ல் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, "பெரம்பூரில் இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார். ஆனால், அது பற்றிய எந்த ஒரு அடுத்த கட்ட தகவலும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications