திராணியை நிரூபிக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தல் களம்: பிரச்சாரம் நாளை ஓய்வு

சங்கரன்கோவில் தொகுதிக்கு மார்ச் 18ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ந் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவகர் சூரிய குமார், அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி, மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமார், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார், பாஜக வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி வேட்பாளர் நாகேஸ்வர ராவ், அகில இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கணேசன் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்கு பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் மார்ச் 16ந் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி மதுபானக் கடைகளுக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறுதிகட்ட பிரசாரத்தில் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவிலில் நடக்கும் பொது கூட்டத்தில் பேசுகிறார்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 கம்பெனி துணை ராணுவமும், 2 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு வாக்கு பதிவு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்களில் நேற்று வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டன. மார்ச் 21க்குள் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications