மார்ச் 12 - 22ல் அஜ்மானில் இலவச மருத்துவ முகாம்

முகாமினை அஜ்மான் இமிக்ரேஷன் பொது மேலாளர் பிரிகேடியர் முஹம்மது அப்துல்லா அல்வான் துவக்கி வைத்தார். இமிக்ரேஷன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எம்மால் இயன்ற ஒரு சமுதாயப் பணி இம்மருத்துவ முகாம். பொதுமக்களின் உடல் நலத்தில் எமக்கும் அக்கறை உள்ளது என்பதனை நினைவுறுத்தும் வகையில் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கேப்டன் சுல்தான் இஸ்மாயில் அல் ஜாபி, கர்னல் டாக்டர் அஹமது அப்துல் ரஹ்மான் அல் நூஹ்மான், முஸப்பிஹ் கல்ஃபான் பின் கலிதா, இப்னு சினா மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் அப்துல் கஃபூர், பொது மேலாளர் ஷேக் முஹம்மது அலி உள்ளிட்டோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அஜ்மான் இமிக்ரேஷன் உயர் அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இம்மருத்துவ முகாம் வரும் 22ம் தேதி வரை நடைபெறும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications