பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிவு

காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதுமே, 195 புள்ளிகள் வரை சென்செக்ஸில் உயர்வு காணப்பட்டது. ஆனால் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசிக்க ஆரம்பித்ததுமே, பங்குச் சந்தைகளில் சரிவு ஆரம்பித்தது.
ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பெரும் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.
ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. வர்த்தக நேர முடிவில் 224 புள்ளிகள் இழந்து 17451.24 ஆக நிலைபெற்றது.
நிப்டியில் சரிவு காணப்பட்டது. 62 புள்ளிகளை இழந்து 5317 -ல் நிலைபெற்றது. பட்ஜெட்டில் எதிர்ப்பார்த்த சலுகைகள் இல்லாததாலேயே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இன்று வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இன்னும் ஓரிரு தினங்கள் இந்த நிலை தொடரும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ன்று ஆசியாவின் இதர சந்தைகளிலும் கூட வீழ்ச்சிப் போக்கே காணப்பட்டது.












Click it and Unblock the Notifications