மோசடி புகாரில் அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் - லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் விஸ்வநாதன் வீடு உட்பட 6 இடத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்முதல் செய்ததில் மோசடி என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கிண்டி, கோட்டூர்புரம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மகன் பங்குதாரராக உள்ள பர்னாஸ் நிறுவனத்தின் பெயரில் இம்மோசடி நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications