இந்திய பாதுகாப்புத் துறைக்கான நிதிஒதுக்கீடு சீனாவைவிட மிகக் குறைவு
டெல்லி: பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக 17 சதவீதம் நிதி ஒதுக்கியுள்ளபோதும் சீனா, பாகிஸ்தான் நாடுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகவே கருதப்படுகிறது.
நடப்பு ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ1 லட்சத்து 93 ஆயிரத்து 408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாகும்.
ஆனால் 2012-13-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.9 சதவீதமாக மட்டுமே இருக்கக் கூடும். பாதுகாப்புத் துறை வல்லுநர்களும் ராணுவத்தினரும் கோரி வரும் 3 விழுக்காட்டைவிட இது மிகக் குறைவானதே.
சீனாவைப் பொறுத்தவரையில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கியநிலையில் இந்தியாவோ வெறும் 39 பில்லியன் டாலரை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
இதனிடையே கடந்த ஆண்டு ஆயுத தளவாட கொள்முதலுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் செலவிடப்படாத ரூ3 ஆயிரத்து 55 கோடியை திரும்ப ஒப்படைக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியிருந்தது. இத்தொகையையும் கூட தேவைப்படும் நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் தற்போதும் செலவிட்டுக் கொள்ள நிதி அமைச்சகம் அனுமதித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
முப்படைகளிலும் தற்போதைய கையிருப்பு ஆயுதங்களை முற்று முழுதாக நவீனப்படுத்தும் வகையில் பலவகையான நவீன ரக ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றன. விமானப்படைக்கு ரூ20 பில்லியன் மதிப்பிலான 126 புதிய விமானங்கள் இதில் அடக்கம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications