தமிழக நலனுக்கு எதிரான அணை பாதுகாப்பு மசோதா பிரிவுகள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

இது தொடர்பாக பிரதமர் மன்மோகனுக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நான் கடந்த 29-7-2011 அன்று அணை பாதுகாப்பு மசோதா பற்றி தங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளேன். அதில் 2010-ம் ஆண்டின் அணை பாதுகாப்பு மசோதாவில் உள்ள துணை பிரிவுகள் 26(1), (2), (3), (4) மற்றும் பிரிவு 13 ஆகியவை தமிழக நலனுக்கு எதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால் மத்திய அரசின் நீர்வள நிலைக்குழு மற்றும் நீர்வள அமைச்சகம் ஆகியவை அணை பாதுகாப்பு மசோதாவில் உள்ள துணை பிரிவுகள் 26(1), (2), (3), (4) மற்றும் பிரிவு 13 ஆகியவை பற்றி எந்தவித பரிசீலனையும் செய்யவில்லை. ஒரு மாநிலத்திற்கு உரிமை உடைய அணையை அந்த மாநிலமே பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் ஏராளமான விவசாயிகளும், பயிர் சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழக நலனுக்கு எதிராக உள்ள பிரிவுகளை உடனடியாக நீக்கும்படி நீர்வள அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு தமிழக நலனை பாதுகாக்கும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications