தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்வு !

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சி துறையின் பொது மேலாளர் எஸ்.செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
பொது மக்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சந்தை நிலவரப்படியும், வங்கியில் செலுத்தப்படும் வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி 15 நாட்கள் முதல் ஒரு வருடத்துக்கு உட்பட்ட வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.
15 முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 30 முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும், 180 நாட்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கீழ் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 9.25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதமாக 10.25 சதவீதத்தை ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications