தீவிரவாத தடுப்பு மைய சட்டத்தில் திருத்தம்: நாடாளுமன்றத்தில் பாஜக, இடதுசாரிகள் முயற்சி தோல்வி
டெல்லி: சர்ச்சைக்குரிய தேசிய தீவிரவாத தடுப்பு மைய சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிகள் நாடாளுமன்ற மக்களவையில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது..
மக்களவையில் சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து பாரதிய ஜனதா தலைவர் சுஸ்மா சுவராஜ் பேசியதாவது:
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. ஏற்கெனவே இம்மையத்துக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் செயல்படும் என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு உள்துறை அமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை. மாநில
முதல்வர்களின் சந்தேகங்களப் போக்காமலேயே இத்தகைய முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.
பாஜகவின் சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்புக்குவிடப்பட்டது, இதற்கு ஆதரவாக 125 பேரும் 226 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர்.
இதேபொல் இடதுசாரிகளும் தேசிய தீவிரவாத தடுப்பு மைய சட்டத்தில் திருத்த மசோதாவை கொண்டுவந்தனர். ஆனால் இதுவும் தோற்கடிக்கப்பட்டது. சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 146 பேரும் எதிர்ப்பாக 227 பேரும் வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications