ஐ.நா. தீர்மானம்: மன்மோகன் அறிவிப்பால் ராஜபக்சே நினைப்பில் மண்
சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததைத்தொடர்ந்து பல நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடக்கிறது. இதில் இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. வரும் 23 அல்லது 24ம் தேதியில் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை பல்வேறு முயற்சி செய்து வருகிறது.
அதில் ஒன்றாக தனது பிரதிநிதிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நாடுகளும் இலங்கையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதையடுத்து இந்தியா என்ன செய்கிறது என்று பார்த்துவிட்டு நாம் தீர்மானிக்கலாம் என்றிருந்த நாடுகள் இலங்கைக்கு எதிராகத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் வற்புறுத்தலால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடித்துவிடலாம் என்று நினைத்திருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்த திருப்பம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 46 நாடுகள் வாக்களிக்கலாம். அதில் 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாக ஏற்கனவே அறிவித்துவி்ட்டன. இந்நிலையில் இந்தியாவும் ஆதரவளித்துள்ளதால் அந்த எண்ணிக்கை 23 ஆகி சமநிலையில் உள்ளது. மேலும் பல நாடுகளும் தீர்மானத்தை அதரிக்கும் என்று தெரிகிறது. இதனால் இலங்ககைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications