மெக்சிகோவில் மிக பயங்கர நிலநடுக்கம்: 7.4 ரிக்டெர் பதிவு-500 வீடுகள் சேதம்
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் செவ்வாய்கிழமை மாலை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளது.
மிகக் கடுமையான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
மெக்ஸிகோவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவெரெரோ மாநிலத்தின் ஒஸாகா (oaxaca mexico) எனும் இடத்திற்கு அருகே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 17.5 கிலோமீட்டர் ஆழத்தில் இது இருந்ததாக புவியியல் வல்லுநர்களின் கணக்கெடுப்பு கூறியுள்ளது.
சுமார் ஒருநிமிடம் நீடித்த இந்நிலநடுக்கத்தினால் 500 க்கு மேற்பட்ட வீடுகள் தேசமடைந்துள்ளன. தகவல் தொடர்பு, மின்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சற்று முன்னதாக குவாதமாலா நகரிலும் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் குவெரெரோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களால் நன்கு உணரப்பட்டதுடன் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறி தெருக்களுக்கு ஓடிவந்தனர்.
பசுபிக் கடற்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான அகாபுல்கோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்பட்டு வந்தாலும் 1985 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம் குறித்து கருத்து கூறியுள்ள ஜனாதிபதி ஃப்லிப்பி கால்டரன் நிலநடுக்க சேதம் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து உணர்ந்துள்ளதாகவும் அதை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications