மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டணம் செலுத்தாமல் ரூ.6.27 கோடி பாக்கி வைத்துள்ள எம்பிக்கள்

முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயன்படுத்திய மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகியவற்றிற்கு செலுத்தப்படாமல் உள்ள கட்டண பாக்கி எவ்வளவு என்பது குறித்து சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிய விண்ணப்பத்திருந்தார். இதற்கு டெல்லி மாநகராட்சி அளித்த பதிலில், மொத்தம் ரூ.6 கோடியே 27 லட்சம் கட்டண பாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர்களான சரண்சிங், பி.வி.நரசிம்மராவ், தேவேகவுடா, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முன்னாள் அமைச்சர்கள் ராஜேஷ் பைலட், சுனித் தத், ஜானேஷ்வர் மிஸ்ரா, சத்ருகன் மிஸ்ரா, சவுத்ரி, சுப்பிரமணியன் சாமி ஆகியோர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது
மொத்தம் 3,335 மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண பில்கள் செலுத்தப்படாமல் உள்ளது. இதில் முன்னாள் எம்.பி. கனிகான் சவுத்ரி அதிகபட்சமாக ரூ.42 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த 2008ம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, கட்டண பாக்கி வைத்துள்ள எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் இருந்து அதனை வசூலித்து கொள்ளலாம் என்று லோக்சபா செயலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் எம்.பி.க்கள் மீதம் வைத்துள்ள கட்டண பாக்கி தொகை அதிகம் என்பதால், அவர்களின் சம்பளத்தில் இருந்து மொத்த தொகையையும் கழித்துக் கொள்ள நீண்ட காலமாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications