குடிமகன்களின் கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்!

ஆண் பெண் என்ற பேதமின்றி ஜில் பீரை குழுவாகக் குடிக்கும் காட்சிகள் இப்போது அதிகரித்து வருகின்றன.
கோடை வெயில் வேறு வறுத்தெடுக்கிறது. மார்ச் தொடங்கி ஜூலை வரை தமிழகத்தில் இரண்டு மடங்கு பீர் விற்பனையாவது வழக்கம். இந்த முறை மூன்று மடங்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தளவு இளைஞர்களின் தேசிய பானமாகிவிட்ட ஜில் பீர், இன்றைய நிலவரப்படி டாஸ்மாக் கடைகளில் கிடைப்பதில்லை. பிளாக்கில் கூட கிடைப்பதில்லையாம். எந்த விலைக்கும் வாங்க தயாராக இருந்தும் லோக்கலில் பீர் இல்லாததால், புதுச்சேரிக்குப் படையெடுத்துப் போய் போலீசுக்கு பயந்து பயந்து பெட்டி பெட்டியாக பீர்களை கடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இளைஞர்கள்.
இதையெல்லாம் மனதில் கொண்டு, பீர் சப்ளையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசின் டாஸ்மாக். ஆனால் தேவைக்கேற்ப பீர் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. எல்லா மதுபான தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்கின்றன.
எனவே பீர் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து பீர் வரவழைக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களில் இருந்து பீர் கொள்முதல் செய்ய முடிவு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு தேவையான பீர் பெட்டிகள் எவ்வளவு என்பதை கணக்கீட்டு டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.
ஏப்ரல் முதல் வெளி மாநில பீர் வகைகள் தமிழகத்திற்கு வருகின்றன. எனவே இதற்கு முன் எப்படியோ, இந்த ஆண்டு பீர் தட்டுப்பாடே இருக்காது என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications