பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம்: உதயகுமார் மனைவி மீரா புகார்
நாகர்கோவில்: தமது மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலில் போலீசாருக்குத் தொடர்பு இருப்பதாக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் மனைவி மீரா புகார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். இவர் நாகர்கோவில் பழவிளை பகுதியில் சாக்கர் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் முதல்வராக உதயகுமாரின் மனைவி மீரா உள்ளார். இவர்களின் பள்ளி மதில் சுவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பல் இடித்தது. இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையிலும் இவர்களின் பள்ளி சுவர் இடிக்கப்பட்டதோடு வகுப்பறைகளும் சூறையாடப்பட்டன. பள்ளி வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதுபற்றி உதயகுமாரின் மனைவி மீரா ராஜாக்கமங்கலம் போலீசில் மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் பள்ளியின் மீது கடந்த வாரம் சிலர் தாக்குதல் நடத்தினர். இதுபற்றி போலீசில் புகார் செய்த பின்பு எங்கள் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் மீண்டும் பள்ளியின் மீது தாக்குதல் நடந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் இச்சம்பவம் நடந்துள்ளன. எனவே போலீசாருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்று நம்புகிறோம். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி
குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையே இன்று பள்ளியில் உடைக்கப்பட்ட வகுப்பறைகளை தவிர ஏனைய அறைகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது. மேலும் இன்று பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமும் நடந்தது. இதில் பள்ளிக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தப்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications