2ஜி முறைகேட்டில் சிக்கிய நிறுவனங்களிடம் பணம் கேட்டார் முரளி மனோகர் ஜோஷி! - மிஸ்ரா
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து பாஜக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாகிவிடலாம் என்று கனவு கண்டு அது பொய்த்துப்போனதால் என்னவோ லண்டன் தொழிலதிபர் அனுஸ்மன் மிஸ்ரா இப்போது பாரதிய ஜனதாவுக்கு எதிராக அஸ்திரங்களை அள்ளிவீசி வருகிறார்.
கர்நாடகத்தில் எடியூரப்பா, ராஜ்யசபாவில் கட்காரி மீது காட்டம், குஜராத்தில் சீன்படம் என்று இடியாப்ப சிக்கலில் தவித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது இடியாய் இறங்கியிருக்கிறது அனுஸ்மன் மிஸ்ராவின் குற்றச்சாட்டுகள்!
அனுஸ்மன் யார்.?
லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரான அனுஸ்மன் மிஸ்ரா, நிதின் கட்காரியின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாகிவிடலாம் என்று கனவு கண்டு வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் அனுஸ்மனுக்கான கட்காரியின் ஆதரவுக்கு மூத்த தலைவர்களான அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ், ஜேட்லி, யஸ்வந்த் சின்ஹா என பெரும் தலைகள் எதிர்க்கவே அம்முடிவு கைவிடப்பட்டது. அனுஸ்மான் மிஸ்ராவும் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.
இதனால் விரக்தியடைந்து போன அவர் இப்போது அதிரடி ஆயுதங்களை பாரதிய ஜனதா மீது வீசி வருகிறார்.
இது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனுஸ்மன் மிஸ்ரா கூறியிருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சிக்கு நீண்டகாலமாகவே நான்தான் நிதியுதவி செய்துவருகிறேன். பாஜகவின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, தேர்தலுக்கான நிதி உதவியை என்னிடம் கோரினார்.
இதுமட்டுமல்ல.. தற்போது 2ஜி அலைவரிசையில் சிக்கி உள்ள நிறுவனங்கள் பலவற்றையும் முரளிமனோகர் ஜோஷி நாடி தேர்தலுக்காக நிதி உதவி கேட்டார் என்றார்.
ஜோஷி மறுப்பு
ஆனால் இக்குற்றச்சாட்டை முரளிமனோகர் ஜோஷி மறுத்துள்ளார். "2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக எனது தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நேர்மையாகவே நடைபெறுகிறது. நான் யாரிடமும் தேர்தல் நிதி கோரவ்ல்லை" என்றார்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சுமமா விடுமா என்ன?
முரளிமனோகர் ஜோஷி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையெனில் உடனடியாக ஜோஷி தாம் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் நிருபம் வலியுறுத்தியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications