குஜராத் பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. 'சீன்' படம் பார்க்கும் சிடியை வெளியிட்டது காங்கிரஸ்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டப்பேரவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஜெத்தா பர்வத் ஆபாச படம் பார்க்கும் காட்சி அடங்கிய சி.டியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
குஜராத் பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்களான செளத்ரி மற்றும் பர்வத் ஆகியோர் தங்களது கைபேசிகளில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் மாநில பேரவையில் கடும் அமளியும் நிலவியது. இதையடுத்து எம்.எல்.ஏக்களின் கைபேசிகள் தடவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. தடவியல் சோதனை முடிவில் எம்.எல்.ஏ.க்களின் கைபேசிகளில் எந்தவித ஆட்சேபகரமான காட்சிகளும்
இல்லை என்று கூறப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை அவ்வளவு எளிதாக விடுவது இல்லை.. பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பர்வத், சட்டப்பேரவையில் அமர்ந்தபடியே கைபேசியில் ஆபாசப் படம் பார்க்கும் காட்சியை உள்ளடக்கிய சி.டி.யை வெளியிட்டுள்ளது.
இந்த சிடியை வெளியிட்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அர்ஜூன் மொத்வாதியா கூறியதாவது:
குஜராத் மாநில தடவியல் துறை முதலமைச்சர் நரேந்திரமோடியின் உத்தரவின் பேரில் அறிக்கையைக் கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தடவியல் துறை அதிகாரிகள் முதலமைச்சர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் கொடுக்கப்பட்டது ஆபாச படங்கள் அடங்கிய கைபேசிகளா என்பது சந்தேகத்துக்குரியதுதான். மாநில சட்டப்பேரவை சபாநாயகரும்கூட ஆளும் கட்சியின் முகமாகத்தான் செயல்படுகிறாரே தவிர நடுநிலையோடு செயல்படவில்லை என்றார் அவர்.
மற்றொரு எம்.எல்.ஏ.?
ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் பர்வாத் மட்டுமே தற்போது சரியாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு எம்.எல்.ஏ.வான செளத்ரி பற்றி இப்போது யாரும் பேசவில்லை. அவரது சிடி. யாரிடம் இருக்கிறதோ?
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications