குமரி-30க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் தீ: ரூ. 1 கோடி பொருட்கள் நாசம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் மற்றும் அதன் அருகில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமைடந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications