பட்ஜெட்.. ஜெ.வுக்கு பன்னீர் செல்வம் புகழாரம்- அதிமுகவினர் நீண்ண்ண்ட நேரம் மேசைத் தட்டு

பட்ஜெட் உரையைத் தொடங்கிய அவர் தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு சங்கரன்கோவிலில் பெரும் வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். அவர் எதிலும் வெற்றி என்ற வார்த்தையைத் தொடங்கியதுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இடைவிடாமல் சில நிமிடங்களுக்கு மேசைகளைத் தட்டினர். இதைக் கேட்டும், பார்த்தும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிரிப்பும், புன்னகையும் தாங்க முடியவில்லை.வாய் விட்டுச் சிரித்தார் அவர்.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது உரையைத் தொடங்கி வாசிக்க ஆரம்பித்தபோது வரிக்கு வரி அவர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேச தொடர்ந்து மேசைகளைத் தட்டினார்கள் அதிமுகவினர்.
அதன் பின்னர் பட்ஜெட்டைவாசிக்க ஆரம்பித்தார் பன்னீர் செல்வம். அதிமுக அரசு அமைந்த பின்னர் தற்போது 2வது பட்ஜெட்டை அது தாக்கல் செய்துள்ளது.
பட்ஜெட் மீதான விவாதம் 28-ந் தேதி தொடங்குகிறது. முதலில் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெறும். அதற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். அதைத்தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்.
கூடங்குளம்விவகாரம், மின் பற்றாக்குறைப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தேமுதிக சைடிலிருந்து புயலைக் கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முதல்வர் சவால் விட்டு கடந்த தொடரில் பேசினார். அதற்கு கடும்கோபத்துடன் எழுந்து நின்று நாக்கைத் துருத்தி, கையை உயர்த்தி, விரல்களை நீட்டி, கண்களில் கோபம் கொப்பளிக்க எதையோ பேசி அதனால் 10 நாட்களுக்கு சபைக்கு வரக் கூடாது என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே விஜயகாந்த் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications