இறக்குமதி வரி உயர்வால் சரிவை சந்திக்கும் தங்கம் இறக்குமதி

Subscribe to Oneindia Tamil

Gold Bullion
டெல்லி: மத்திய நிதிநிலை அற்க்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு 2012-ஆம் ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி, 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 33 விழுக்காடு சரிவடையும் என ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
பயன்பாடு

தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2012-ஆம் ஆண்டில் இறக்குமதி குறைந்தால், சீனா முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டில் இந்தியா 969 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. இது, 2012-ல் 655 டன்னாக குறைய வாய்ப்புள்ளது என ஆய்வில் கலந்து கொண்ட 10 நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக இறக்குமதி வரியை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பது தங்க நகைகள் வாங்குபவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று என்றும், தங்கம் இறக்குமதி 30 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளது என்றும் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் இண்டஸ்இந்த் வங்கியின் உதவி துணைத் தலைவர் பினாகின் வியாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டில் தங்கம் விலை அமோக அளவில் 22 விழுக்காடு அதிகரித்தது. எனவே, தங்க நகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக அவ்வாண்டில் தங்கம் இறக்குமதி 535.88 டன்னாக குறைந்தது.

ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக் குறை அதிகரித்து வருகிறது.

கச்சா எண்ணெய், பொறியியல் சாதனங்கள் ஆகிய இரண்டிற்கும் அடுத்தபடியாக தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் 3,390 கோடி டாலர் (ரூ.1,69,500 கோடி) மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப் பட்டது. இது, நாட்டின் மொத்த இறக்குமதியில் 8.9 விழுக்காடு. அந்த நிதி ஆண்டில் இந்தியா, தங்கம் தேவைப்பாட்டில் 92 விழுக்காட்டை இறக்குமதி செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இறக்குமதி 5,800 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக் கடைகள் அடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. அதேசமயம், வரியை மத்திய அரசு குறைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

நடப்பு 2012-ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதி 450 டன்னாக குறையும் என மும்பை தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தமட்டில் தங்க நகைகள் பயன்பாடு வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அம்சமாகும் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+