ஆந்திரா: மே மாதத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெல்லி: ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கான அரை இறுதித் தேர்தலாக் கருதப்படும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஒ.எஸ். குரேஷி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தெலுங்குதேசம் கொண்டு வந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கட்சி கொறாடா உத்தரவை மீறி ஆதரித்ததற்காக 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள். இதேபோல் ஜெகனுக்கு ஆதரவாக பிரஜா ராஜ்யம் கட்சியின் எம்.எல்.ஏ. சோபா நாகிரெட்டி ராஜினாமா செய்தார். நெல்லூர் காங்கிரஸ் எம்.பி. மேகபதி ராஜ்மோகனும் ஜெகனுக்கு ஆதரவாக ராஜினாமா செய்தார்.
மேலும் திருப்பதி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. சிரஞ்சீவி தற்போது ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவர் எம்.எல்.ஏ.பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் திருப்பதி தொகுதிக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது.
மொத்தம் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த வாரம் முடிவடைந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 4 தொகுதிகளிலும் ஜெகன் கட்சி 1 தொகுதியிலும் வென்றது. காங்கிரஸ் கட்சி மண்ணையே கவ்வியது.
இத்தேர்தலைப் பொறுத்தவரை ஜெகன்மோகன்ரெட்டி தமது பலத்தை நிரூபித்தாக வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஜெகன் மோகன் ஆதரவு வேட்பாளர்களைத் தோற்கடித்தாக வேண்டும். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலானது எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய அரை இறுதிப் போட்டியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications