ராதாபுரம் வட்டத்தில் 144 தடை உத்தரவு- நீக்கக் கோரிய மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் ராதாபுரம் வட்டத்தில் 144 தடை உத்தரவு தொடருகிறது.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மாநில அமைச்சரவை தீர்மானம் எடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து, கூடங்குளம் பகுதியில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 15 பேரில், மெல்ரெட் என்ற பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதனால் அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அணு உலை எதிர்ப்புக் குழுவின் உதயகுமார், புஷ்பராயன் உள்பட 14 பேர் தங்களது உண்ணாவிரதத்தை 8-வது நாளாக இன்றும் தொடர்கின்றனர்.












Click it and Unblock the Notifications