நைஸ் டு மீட் யு பிரைம் மினிஸ்டர்: மன்மோகன் சிங்கை ஆரத் தழுவிய ஒபாமா!
Subscribe to Oneindia Tamil

தென்கொரிய தலைநகர் சியோலில் 2 நாள் அணுபாதுகாப்பு உச்சி நடக்கிறது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் முதல் நாளான நேற்றிரவு பன்னாட்டு தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட மன்மோகன் சிங்கை பார்த்ததும் அமெரிக்க அதிபர் ஒபாமா புன்னகை புரிந்து கட்டித்தழுவினார்.
அந்த விருந்திற்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியை பார்த்த மன்மோகன் சிங் அவருடன் கைகுலுக்கினார்.
அணு சக்தி தீவிரவாதிகளின் கைகளில் கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று உலக தலைவர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications