மேற்குவங்கத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் அதிர்ந்தன
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சில பகுதிகளில் இது உணரப்பட்டது. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று அதிகாலை 5.10 மணி அளவில், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகுகளாக இது பதிவாகி இருந்தது.
பீகார் மாநிலம் மற்றும் நேபாள எல்லையில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது, கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் மக்கள் பதறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். தொடர்ந்து பதட்டம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications