ஹஸாரே குழுவினருக்கு நாடாளுமன்றம் கண்டனம்!

வலுவான லோக்பால் சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி, டெல்லியில் கடந்த 25-ந் தேதி அன்னா ஹசாரே குழுவினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது எம்.பி.க்களையும், மத்திய அமைச்சர்களையும் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கிப் பேசினார்.
14 அமைச்சர்களின் பெயர்களை பகிரங்கமாகச் சொல்லி, அவர்களை ஊழல்வாதிகள் என்றார். பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிரிமினல்கள் என்றார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்னா ஹசாரே குழுவினர் தொடர்ந்து எம்.பி.க்களை தாக்கி பேசி வருவதற்கு நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி எம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அன்னா ஹசாரே குழுவினரை கண்டித்து குறுகிய விவாதம் ஒன்றை ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் சரத் யாதவ் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.
ஜனநாயக அமைப்புகள் மீது அவமதிப்பாக பேசி வருகிறவர்கள் மீது சபாநாயகர் தாமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு கட்சி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.
சிலர், அன்னா ஹசாரே குழுவினரை சபைக்கு வரவழைத்து தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முலாயம் சிங்-தம்பித்துரை
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் பேசும்போது, "நாடாளுமன்றம் மிக உயர்ந்த அமைப்பாகும். அதன் உரிமைக்கு எதிராக பேசிவரும் மக்கள் அமைப்பு உறுப்பினர்களை சபைக்கு வரவழைக்க வேண்டும்'' என்று கூறினார். இதில் உறுப்பினர்களின் ஒத்த கருத்தினையும் அவர் வலியுறுத்தினார்.
முலாயம் சிங் கருத்தை வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை பேசினார். அவர் தனது பேச்சின்போது, "இந்த சபையில் தீர்மானம் கொண்டு வந்து, நாடாளுமன்றவாதிகளை- உயர்ந்த ஜனநாயக அமைப்பான அரசியல் சட்ட அதிகார அமைப்பை சாடியவர்களை தண்டிக்க வேண்டும்'' என்று கோரினார்.
பரூக் அப்துல்லா
தேசியமாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா, தன்மீது (அன்னா குழுவினரால்) கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் எம்.பி. பதவியிலிருந்து விலகுவதோடு மட்டுமல்லாது அரசியலில் இருந்தே முழுக்கு போட்டு விடுவதாக ஆவேசமாக கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜெகதாம்பிகா பால், ராஷ்டிரீய ஜனதா தள உறுப்பினர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அத்சுல் ஆகியோரும் அன்னா ஹசாரே குழுவினரை கண்டித்து பேசினர்.
சபாநாயகர் மீரா குமார்
உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்னர் சபாநாயகர் மீராகுமார் அன்னா ஹசாரே குழுவினரை கண்டித்து பேசினார். அவர் கூறுகையில், "இந்த மதிப்புக்குரிய சபையின் கண்ணியத்துக்கும், மதிப்புக்கும் குந்தகம் விளைவிக்கிற எந்த ஒரு கருத்தும் விரும்பத்தகுந்தது அல்ல. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. கண்டிப்புக்குரியது.
உறுப்பினர்களின் நடத்தை, செயல்பாடுகள் ஆகியவற்றை உன்னிப்பாக ஆராய்ந்து, மதி நுட்பத்தை ஆராய்ந்துதான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நாடாளுமன்றம் என்பது ஒட்டுமொத்த தேச மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகும்," என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications