அணு மின் உற்பத்தி சாதனையை யூனிட் கணக்கில் அரசு 'அளப்பது' ஏன்?

ஆனால் இது பெரிய சாதனை ஒன்றுமில்லை என்பது பின்னர் தெரியவந்தது. இந்த உற்பத்தி அளவை மெகாவாட் கணக்கில் சொன்னால் உண்மை அம்பலமாகிவிடும் என்பதால், யூனிட் கணக்கில் 'அளந்துவிட்டுள்ளார்' பரத்வாஜ். உண்மயில் இந்தியாவின் 19 அணுஉலைகளிலும் மொத்தமாக 3200 மெகாவாட் கூட உற்பத்தியாகவில்லை என்பதே உண்மை.
சென்னையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த பரத்வாஜ் கூறுகையில், "இந்த ஆண்டு அணு சக்தி மூலம் 32,000 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று காலை இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அணு மின் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
எரிபொருள் பிரச்சனையால் சில அணு மின் நிலையங்களில் குறைவான அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள தும்மலபள்ளி சுரங்கம் தற்போது செயல்படத் துவங்கியிருப்பதால் இன்னும் 2 மாதங்களில் அங்கிருந்து யுரேனியம் கிடைக்கும். அதன் பிறகு குறைந்த மின் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையங்களில் உள்ள எரிபொருள் பிரச்சனை தீரும். இந்தியாவில் தற்போது அணு சக்தி மூலம் 4,680 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இனி வரும் காலத்தில் மேலும் பல அணு மின் நிலையங்கள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் நவீனதொழில்நுட்பத்தில் 1,650 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு மின் நிலையம் அமைப்பது குறித்து பிரான்ஸுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அணு மின் உற்பத்தி குறித்து தென் கொரியாவுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. தென் கொரியாவில் 1,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான அளவு அணு உலை மாதிரி உள்ளது. நம் தேவைக்கேற்ப அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்," என்றார்.
மெகாவாட் கணக்கில் சொன்னால் குட்டு அம்பலமாகிவிடும் என்று 32000 மில்லியன் யூனிட் என்று கூறியுள்ளார். இது எத்தனை மெகாவாட்டுக்கு சமமானது என்று கேட்டால் கடைசிவரை பதிலே கூறவில்லையாம் பரத்வாஜ்.
உண்மையில் இந்தியாவின் 19 அணு உலைகளின் மொத்த உற்பத்தி திறன் 4,680 மெகாவாட். இப்போது அதில் 3200 மெகா வாட்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. அதாவது அனைத்து உலைகளிலும் சேர்த்து.
மொத்த உற்பத்தித் திறனில் இன்னும் 1480 மெவா அளவு உற்பத்தி செய்யப்படவே இல்லை. காரணம் கேட்டால் யுரேனியம் பற்றாக்குறை என்கிறார்கள்.!












Click it and Unblock the Notifications