கணினி மயமாகும் கிராம நிர்வாக அலுவலகங்கள் – ஜெ. நடவடிக்கை

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
சென்னை தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை கணினி மூலம் இணைக்கும் இ கவர்னஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதாவின் கனவாகும். இதன் முதற்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடித்திட ஏதுவாக, கடந்த 14.11.2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய மடிக்கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் கணினிப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனடிப்படையில், 22 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் மடிக்கணினி, பிரிண்டர் மற்றும் கணினிப் பயிற்சி கையேடு வழங்கும் திட்டத்தினை வியாழக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஏழு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 7,787 கிராம நிர்வாக அலுவலர்கள் பயனடைவார்கள்.
விஏஒ பணி நியமன ஆணை
இதேபோல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 3,318 கிராம நிர்வாக
அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு நபர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பணிநியமன ஆணைகளை 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.
மடிக்கணினி, பிரிண்டர் மற்றும் கணினிப் பயிற்சி கையேடுகளை வழங்கியதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications