இந்தவாரம் சம்பளம் கொடுத்துவிடுவோம் - மல்லையா
Subscribe to Oneindia Tamil

கிங்பிஷர் விமான நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உறுதி அளித்துள்ளார் மல்லையா.
இளநிலை ஊழியர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும். அனைத்து பைலட்டுகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஏப்ரல் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஊதியம் வழங்கப்படும் என்று மல்லையா அந்தக் கடிதத்தில் தெரிவித்தார்.
இதனிடையே மல்லையாவின் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாட வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர்களுக்கு கிங்பிஷர் நிறுவன ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊதியம் வழங்கக் கோரி மும்பையில் உள்ள கிங்பிஷர் அலுவலகத்துக்கு வெளியே பைலட்டுகள், பொறியாளர்கள், விமான ஊழியர்கள் அனைவரும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications