எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 4ம் தேதி துவங்குகிறது: 12.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வரும் 4ம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு சுமார் 12.5 லட்சம் மாணவ-மாணவியர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 4ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு 12 லட்சத்து 44 ஆயிரத்து, 799 மாணவ-மாணவியர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் 11 லட்சத்து 44 ஆயிரத்து 232 பேர் பள்ளிக்கூடங்கள் மூலமாக தேர்வு எழுதுகிறார்கள். இது தவிர தனித்தேர்வர்களில்13 ஆயிரத்து 176 மாணவர்களும், 6393 மாணவிகளும் புதிய பாடத்திட்டத்தின் கீழும், 81 ஆயிரத்து 28 பேர் பழைய பாடத்திட்டத்தின் கீழும் தேர்வு எழுதுகிறார்கள்.
இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 3,033 தேர்வை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க மாவட்டந்தோறும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4,500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் தவிர தவிர மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சப் கலெக்டர்கள் ஆகியோரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிடுவார்கள். மேலும் கல்வித்துறை இணை இயக்குநர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கி தேர்வுப் பணிகள் மேற்கொள்கின்றனர்.
காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு சரியாக 12.45 மணிக்கு முடியும். இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்கவும், தேர்வு பதிவு எண்ணை எழுதவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
4ம் தேதி தமிழ் முதல் தாள்
9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்.
11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்.
12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்.
16ம் தேதி கணிதம்.
19ம் தேதி அறிவியல்.
23ம் தேதி சமூக அறிவியல்.
மெட்ரிகுலேஷன்
4ம் தேதி தமிழ் முதல் தாள்.
9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்.
10ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்.
11ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்.
12ம் தேதி கணிதம் முதல் தாள்.
16ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்.
17ம் தேதி அறிவியல் முதல் தாள்.
18ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்.
19ம் தேதி வரலாறு மற்றும் சிவிக்ஸ்.
20ம் தேதி புவியியல் மற்றும் பொருளாதாரம்.
ஆங்கிலோ இந்தியன்
ஏப்ரல் 4ம் தேதி மொழித்தாள்.
9ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்.
10ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்.
11ம் தேதி கணிதம் முதல் தாள்.
12ம் தேதி கணிதம் இரண்டாம் தாள்.
16ம் தேதி அறிவியல் முதல் தாள்.
17ம் தேதி அறிவியல் இரண்டாம் தாள்
18ம் தேதி வரலாறு மற்றும் சிவிக்ஸ்.
19ம் தேதி புவியியல்.
ஓ.எஸ்.எல்.சி.
ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்.
9ம் தேதி முதன்மை மொழிப்பாடம் (சமஸ்கிருதம், அரபிக்) முதல் தாள்.
10ம் தேதி முதன்மை மொழிப்பாடம்(சமஸ்கிருதம், அரபிக்) இரண்டாம் தாள்.
11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்.
12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்.
16ம் தேதி கணிதம்.
17ம் தேதி சிறப்பு (சமஸ்கிருதம், அரபிக்) மொழித்தாள் 3.
19ம் தேதி அறிவியல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications