பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மே இறுதியில் கலிங்கப்பட்டி வருகை

பஞ்சாப் முதல்வராக அகாலிதள தலைவர் பிரகாஷ்சிங் பாதல் 5வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுளளார். இதையடுத்து மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 29ம் தேதி பிரகாஷ்சிங் பாதல் வீட்டுக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பது, மற்றும் பல்வேறு அரசியல் விசயங்கள் குறித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசினர். அப்போது பிரகாஷ் சிங் பஞ்சாபில் முன் மாதிரி கிராமமாக விளங்கும் தனது சொந்த ஊரான பாதல் கிராமம் குறித்து வைகோவிடம் கூறினார்.
அதனை சுவராஸ்யமாக கேட்டு கொண்டிருந்த அவர், எனது கலிங்கப்பட்டியையும் உங்களது பாதல் போன்று முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என்று பிரகாஷ்பாதலிடம் தெரிவித்தார். உடனே அவர் அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நான் கலிங்கப்பட்டி வருகிறேன். உங்கள் ஊரை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று வைகோவிடம் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாதல் கிராமத்தை போன்று கலிங்கப்பட்டியையும் மாற்றி காட்டுவேன் என்று வைகோ கூறினார். இதையடுத்து பிரகாஷ்சிங் பாதல் வருகையையொட்டி மதிமுகவினர் இப்போதே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications