முடிகிறது சஸ்பெண்ட்.. 5ம் தேதி முதல் சட்டசபைக்கு வரலாம் விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: சபாநாயகர் ஜெயக்குமார் விதித்த சஸ்பெண்ட் நடவடிக்கை நாளையுடன் முடிவடைவதால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை மறு நாள் அதாவது, ஏப்ரல் 5ம் தேதி முதல் சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம்.

இதற்கிடையே, திமுக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி ராஜா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் அவர் அவை நடவடிக்கையில் பங்கேற்க முடியும்.

கடந்த ஜனவரி 31ம் தேதி நடந்த அவைக்கூட்டத்தின்போது செல்போன் மூலம் அவை நடவடிக்கைகளை படம் பிடித்தார் என்று டிஆர்பி ராஜா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை 10 நாள் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். அந்தக் கூட்டத் தொடரில் அவர் 5 நாட்கள் வரவில்லை. பின்னர் கடந்த 26ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐந்து நாட்கள் அவர் பங்கேற்கவில்லை. சஸ்பெண்ட் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் ராஜா சபைக்கு வரலாம்.

இதேபோல, கடந்த பிப்ரவரி 1ம்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விஜயகாந்த் பேசுகையில், கடும் மோதல் வெடித்தது. முதல்வருக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடும் வாதம் வெடித்தது. அப்போது அதிமுக உறுப்பினர்களைப் பார்த்து நாக்கைத் துறுத்தி, உதடுகளைக் கடித்து, நரம்பு புடைக்க கைகளை ஆவேசமாக வீசியபடி விஜயகாந்த் ஏதோ பேசினார்.

இதையடுத்து அவரை 10 நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். விஜயகாந்த் சஸ்பெண்ட்டுக்குப் பிறகு சட்டசபைக் கூட்டம் 3 நாட்கள் நடந்தது. தற்போதைய கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கலின்போது விஜயகாந்த்தால் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் மீதான சஸ்பெண்ட் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் 5ம் தேதி முதல் அவர் வழக்கம் போல சபைக்கு வரலாம். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான சலுகைகளையும் அனுபவிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+