எங்களால் தான் மின் கட்டணத்தை அரசு ஓரளவாவது குறைத்தது: ராமதாஸ் பேச்சு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7,874 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை தமிழக அரசு கடந்த வாரம் உயர்த்தியது. இதைக் கண்டித்து பாமக நாளை மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து மின்சார கட்டணத்தை ஓரளவு குறைப்பதாக இன்று அரசு அறிவித்துள்ளது.
ஒட்டகத்தின் மீது டன் கணக்கில் சுமைகளை ஏற்றி வைத்துவிட்டு, கடைசியில் அதை ஏமாற்ற ஓரிரு தகர டின்களை மட்டும் இறக்கி வைப்பது போன்றுதான் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
ரூ.7,874 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்திய அரசு வெறும் ரூ.740 கோடிக்கு மின்கட்டணத்தை குறைத்துள்ளது. இந்த ஏமாற்றும் தந்திரம் இனியும் எடுபடாது.
அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி பாமக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் நாளை காலை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications