2 வாரங்களில் நாடு கடத்தப்படும் ஒசாமா மனைவிகள், குழந்தைகள்

கடந்த ஆண்டு மே மாதம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அப்போத்தாபாத் வீட்டில் வைத்து அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது 3 மனைவிகள், 8 குழந்தைகள் உள்பட 14 பேரை பாகிஸ்தான் போலீசார் இஸ்லாமாபாத் அழைத்துச் சென்று அங்கு ஒரு வீட்டில் சிறை வைத்தனர். அந்த வீட்டையே கிளை சிறையாக மாற்றினர்.
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒசாமா குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
ஒசாமாவின் இளைய மனைவி அமல் அப்துல் பத்தாஹ் ஏமனைச் சேர்ந்தவர். அவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவருக்காக வாதாட முகமது ஆமீர் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்தார் அவரது சகோதரர் ஜகரியா அகமத் அப்துல் பத்தாஹ்.
இந்நிலையில் ஒசாமாவின் 3 மனைவிகள், 2 மகள்கள் மீது சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு வந்து தங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு ஒன்றரை மாதம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், தண்டனை முடிந்த பிறகு நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதியே கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதால் இன்னும் 2 வாரங்களில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications