2ஜி விவகாரத்தில் பா.சிதம்பரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?: ஏப். 11 முதல் விசாரணை

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரும் மனுவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தற்போதைய நிலைமை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு மற்றும் தொலைத் தொடர்புத்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையை 3 வார காலத்துக்குள் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ப. சிதம்பரத்தை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சேர்க்கக் கோரி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கை ந்டத்தும்சி.பி.ஐ. நீதிமன்றமே இது தொடர்பாக முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து சி.பி.ஐ. நீதிமன்றத்திலும் சாமி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் ப.சிதம்பரத்தை விசாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சாமி மனுத்தாக்கல் செய்தார்.
இதேபோல் முறைகேடாக அலைவரிசை உரிமம் பெறுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு ப.சிதம்பரம் உதவினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications