இந்தியக் கடற்படையில் ரஷ்ய அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் 'நெர்பா'

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கப்பல் தளப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி முறைப்படி 'நெர்பா' கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். இக்கப்பல் அகுலா - 2 ரகத்தை சேர்ந்ததாகும். இந்திய கடற்படையில் நெர்பாவுக்கு ஐ.என்.எஸ். சக்ரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் 1988ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த சார்லி ரக அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது.
இப்போது நெர்பாவையும் 10 ஆண்டுக் குத்தகைக்குத்தான் இந்தியா எடுத்துள்ளது. இந்தக் குத்தகைக்காக ரூ. 4,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 2004-ம் ஆண்டு கையெழுத்தானது. இதன் மூலம் இந்திய கடற்படையினருக்கு இத்தகைய கப்பலை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களால் மாதக் கணக்கில் நீருக்கடியில் இருக்க முடியும். மேலும், 600 மீட்டர் ஆழம் வரை இந்தக் கப்பலால் நீருக்கடியில் செல்ல முடியும்.
விரைவில் கடலோரக் கண்காணிப்புப் பணியில் ஐஎன்எஸ் சக்ராவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்தும் ஈடுபடும்.
நெர்பா கப்பலை கடந்த 2008ம் ஆண்டே இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைப்பதாக இருந்ததது. ஆனால் பயிற்சி ஓட்டத்தின்போது பல ரஷ்ய வீரர்கள் உயிர் இழந்ததால் ஒப்படைப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சி ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டடதையடுத்து தற்போது நெர்பா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications