சஸ்பென்சன் முடிந்தது.. விஜயகாந்த் சட்டசபைக்கு எப்போது வருவார்?
சென்னை: சபாநாயகர் விதித்த சஸ்பெண்ட் தண்டனை முடிந்த பிறகும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சட்டசபைப் பக்கம் பார்க்க முடியவில்லை. அவர் எப்போது வருவார் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நடந்த கூட்டத் தொடரில் விஜயகாந்த் படு ஆவேசமாக நடந்து கொண்டதால் 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிமுக உறுப்பினர்கள் எதையோ பேச, அதற்குக் கடும் கோபத்துடன் படு வேகமாக தனது இருக்கையிலிருந்து எழுந்து, கைகளை உயர்த்தியும், விரல்களை நீட்டியும், நாக்கை மடித்தும், உதடுகளை கடித்தபடியும் படு கோபமாக பேசினார் விஜயகாந்த்.
இதையடுத்து விஜயகாந்த்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஜெயக்குமார். இந்த சஸ்பெண்ட் தண்டனை தற்போது முடிந்து விட்டது. இருப்பினும் இன்றும் சரி, நேற்றும் சரி விஜயகாந்த் சட்டசபைக்கு வரவில்லை.
இனி நாளை முதல் ஞாயிறு வரை சட்டசபைக்கு விடுமுறை. எனவே திங்கள்கிழமைக்குப் பிறகுதான் விஜயகாந்த்தை சட்டசபைப் பக்கம் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. தேமுதிகவினர் தரப்பிலும் கூட விஜயகாந்த் அடுத்து எப்போது சட்டசபைக்கு வருவார் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications