வார இறுதியில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா செல்ல வேண்டுமா?
சென்னை: வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்களை ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரு, மைசூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் இன்ப சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் கோடை வாசஸ்தலங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வருகின்றது. அதே போல இந்த ஆண்டும் இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி ஏப்ரல் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் வரை சுற்றுலா அழைத்து செல்லப்படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் இருந்து பேருந்து புறப்படும்.
வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை சென்னை திரும்பும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி செல்ல ரூ. 2,500ம், கொடைக்கானல் செல்ல ரூ. 2500ம், ஏற்காடு, ஒகனேக்கல் செல்ல ரூ. 2,200 ம், மைசூர், பெங்களூருக்கு ரூ. 2,350ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா செல்ல விரும்புவோர் 044- 25383333, 25384444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ, www.ttdconline.com என்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரம் அறிய 9176 995830 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications