அணுஆயுதம் தயாரிப்பதில்லை என்றால் ஈரானுக்கு தடையில்லை - அமெரிக்கா
வாஷிங்டன்: அணுசக்தி ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்கு ஈரான் பயன்படுத்துமேயானால் அமெரிக்கா அதனை ஏற்றுக் கொள்ளும் என்று ஈரானிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
துருக்கிய பிரதமர் தயீப் எர்டொகன் மூலாக ஈரான் நாட்டுக்கு இத்தகவலை ஒபாமா கடந்த வாரம் தெரிவித்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் ஏடு தெரிவித்துள்ளது.
அண்மையில் சியோலில் நடைபெற்ற அணு ஆற்றல் பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது துருக்கிய பிரதமருடன் இது தொடர்பாக ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் ஈரானிய மதத் தலைவர் கமேனி அண்மையில், ஈரான் ஒரு போதும் அணு சக்தியை ஆயுத தயாரிப்புக்குப் பயன்படுத்தாது என்றார். இதனைப் பின்பற்றி ஈரான் அரசு உறுதியாக இருக்குமேயானால் நிச்சயமாக அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி செயல்பாட்டை ஆதரிக்கும் என்றும் ஒபாமா கூறியிருக்கிறார்.
பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை ஈரான் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அமைதித் தீர்வுக்கு முன்வருமாறு வலியுறுத்துமாறும் துருக்கிப் பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளதாகத் தெரிகிறது.
துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் அடுத்த வாரம் அணுசக்தி தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் அணுசக்தி தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுகளை முன்னெடுத்துச் செல்ல துருக்கி தயாராக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இப்பேச்சுவார்த்தைகளை சீனாவிலோ அல்லது ஈராக்கிலோ நடத்த வேண்டும் என்று ஈரான் விரும்புவதாக அந்நாட்டு தொலைக்காட்சியில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications