ஸ்டாலின் முன்பு தாத்தா சுப.தங்கவேலன், பேரன் ரித்தீஷ் கோஷ்டிகள் கட்டிப்புரண்டு சண்டை!

வழக்கமாக ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகள்தான் மோதலில் இறங்குவார்கள். இப்போது ஒரு மாற்றமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தாத்தா சுப. தங்கவேலன் மற்றும் அவரது பேரன் ரித்தீஷ் குமார் கோஷ்டிகள், ஸ்டாலின் கண் முன்பாகவே கடும் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப. தங்கவேலன் பார்த்து ஆளாக்கி விட்டவர்தான் ரித்தீஷ் குமார். எடுத்த எடுப்பிலேயே மேலிடத்தில் நல்ல அறிமுகம் பெற்றதாலும், காசை இறக்கி விடுவதில் சற்றும் சளைக்காதவராக இருந்ததாலும் ரித்தீஷ்குமாருக்கு ராமநாதபுரம் எம்.பி. தொகுதியை திமுக மேலிடம் கொடுத்தது. அவரும் ஜெயித்து எம்.பியாகி விட்டார்.
அதன் பின்னர் அவர் தாத்தாவுக்கே ஆப்பு வைக்க ஆரம்பித்தார். தாத்தாவின் பேச்சை கண்டு கொள்ளாமல் தன் போக்குக்குப் போக ஆரம்பித்தார். இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிக்க ஆரம்பித்தது.
இதில் சுப. தங்கவேலன் கோஷ்டியைச் சேர்ந்த திமுக செயலாளர் ஒருவரை ரித்தீஷ் குமார் ஆள் வைத்துக் கடத்திய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கடத்தில் ஈடுபட்ட கும்பலில் இடம் பெற்றிருந்த கேரள ரவுடியைத்தான் சமீபதில் திண்டுக்கலில் வைத்து போலீஸார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபல மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம்தான் போலீஸாரிடம் ரித்தீஷ் குமார் குறித்துப் போட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கான திமுக இளைஞர் அணி நேர்காணல் நடைபெற்றது. மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த நேர்காணலில் சுப. தங்கவேலன் ஆதரவாளர்கள் மற்றும் ரித்தீஷ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தங்கவேலன் ஆதரவாளர் கார்மேகம் தலைமையிலான குழுவுக்கும், ரித்தீஷின் ஆதரவாளர் நல்ல சேதுபதி கும்பலுக்கும் இடையே பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இது பெரும் அடிதடியாக மாறி கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சட்டைகள் கிழிந்தன, கும்மாங் குத்துக்கள் சரமாரியாக விழுந்தன.
இதில் தங்கவேலன் தரப்பைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் முத்துராமலிங்கம் படுகாயமடைந்து விழுந்தார். உடனே அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
ஸ்டாலினை வைத்துக் கொண்டே தங்கவேலன், ரித்தீஷ் கோஷ்டியினர் சண்டை போட்டுக் கொண்டது திமுக வட்டாரத்தில் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரித்தீஷ் ஆதரவாளர்கள் மீதும், ரித்தீஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கவேலன் தரப்பினர் திமுக மேலிடத்தை வலியுறுத்தியுள்ளனராம். ரித்தீஷ் குமார் மு.க.அழகிரி கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications