தேர்தல் 'அக்கப்போருக்கு' முன்பாக குஜராத்தில் சூடு பிடிக்கும் 'சைபர் போர்'!

சமூக வலைதளங்களான பேஸ்புக். டிவிட்டர், ப்ளாக்ஸ், மின் அஞ்சல்கள், இணைய தளங்கள் போன்றவை மட்டுமின்றி யூ டியூப் போன்ற வீடியோக்களை ஏற்றக் கூடிய இணையதளங்களும் குஜராத் மாநில அரசியல் கட்சிகளின் பிரச்சார களமாக உருமாறிவிட்டது. இளைஞர்களைக் கவருவதற்காக இத்தகைய வியூகங்களை கட்சிகள் வகுத்து வருகின்றன.
குஜராத் மாநில முதல்வர் மோடியை, எதுக்கெடுத்தாலும் இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர் என்று எப்போதுமே காங்கிரஸ் கட்சி விமர்சித்து வரும். அப்படிப்பட்ட மோடியையும்கூட வீழ்த்திக் காட்டுவதற்காக சில தன்னார்வ அமைப்புகள் தீவிரமாக இணையதளத்தில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன.
இப்படிக் கூறிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியும்கூட மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான அம்சங்களை தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இப்பொழுது டைம் பத்திரிகையில் 100 புகழ்பெற்ற மனிதர்களுக்கான கருத்துக் கணிப்பும் பரபரப்பான விஷயமாக குஜராத் அரசியலில் பேசப்பட்டு வருகிறது. மோடியை 100-புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்வதற்காக இணையதளத்தை பயன்படுத்துமாறு தமது ஆதரவாளர்களுக்கு மோடி உத்தரவிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
டைம் தளத்தில் மோடிக்கு ஆதரவாக 2 லட்சத்து 56 ஆயிரத்து 792 பேர் வாக்களித்திருக்கின்றனர். அதே நேரத்தில் மோடிக்கு எதிராக 2 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேர் வாக்களித்திருக்கின்றனர். இறுதி முடிவு ஏப்ரல் 17-ந் தேதி தெரியவரும்..
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications