காதலில் 'மோசடி'.. சென்னை ஐ.ஐ.டி யில் உ.பி மாணவர் தற்கொலை!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் குல்தீப்யாதவ் (வயது 19). இவரது தந்தை பெயர் ரோகித்சிங். விவசாய பண்ணை வைத்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் 2-வது ஆண்டு படித்து வந்த இவர், ஐ.ஐ.டி.வளாகத்தில் உள்ள நர்மதா மாணவர்கள் விடுதியில் அறை எண் 311-ல் தங்கி படித்து வந்தார். நன்றாக படிக்கும் மாணவரான குல்தீப் ஞாயிறுக்கிழமை அன்று தான் தங்கி இருந்த அறைக்குள்ளேயே தூக்குபோட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
மாணவர்கள் காப்பாற்ற முயற்சி
குல்தீப் தூக்கில் தொங்குவதை பக்கத்து அறையைச் சேர்ந்த பார்த்து விட்டனர். உடனடியாக கதவை உடைத்து அறைக்குள் புகுந்தனர். தூக்கில் தொங்கிய மாணவர் குல்தீப்பை கீழே இறக்கினார்கள். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. அவரை உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அவர் உயிர் பிழைத்துக் கொண்டார் என்று தான் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் அவர் இறந்து போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாணவர் குல்தீப்பின் உடல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குல்தீப் இறந்த தகவலை உடனடியாக ஆக்ராவில் வசிக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு மாணவர்கள் தெரிவித்தனர்.
உயிரை மாய்த்த காதல்
குல்தீப் தற்கொலைக்கு காதல் பிரச்சினையே காரணமாக கூறப்படுகிறது. மாணவரின் அறையில் போலீசார் சோதனை போட்டபோது, டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. தன்னோடு படிக்கும் மாணவி ஒருவரை குல்தீப் உயிருக்கு உயிராக காதலித்துள்ளார். ஆனால் அந்த மாணவியும் குல்தீப்பை காதலித்துள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் காதலித்து மோசடி செய்து விட்டதாக தெரிகிறது. இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மூன்று முறை பேசினார்
குல்தீப் உயிரை விடுவதற்கு முன்பு தனது காதலியோடு 3 முறை செல்போனில் பேசி இருக்கிறார். முதலில் காலை 8.57 மணிக்கு குல்தீப்புடன் அவரது காதலி பேசி இருக்கிறார். அடுத்து 9.27-க்கு ஒரு முறை கூப்பிட்டு பேசி இருக்கிறார். இறுதியாக 9.42 மணிக்கு என்னோடு பேசு என்று செல்போனில் எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பி உள்ளார். குல்தீப்பும் உடனடியாக பேசி உள்ளார். அதன்பிறகுதான் அறையில் தூக்கில் தொங்கி உள்ளார். இந்த செல்போன் பேச்சுகள்தான், குல்தீப்பின் இறுதி அத்தியாயத்தை எழுதி இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications