புதுக்கோட்டை: முத்துக்குமரன் மறைந்த சோகம் போவதற்குள் தேர்தல் களத்தில் குதித்த அதிமுக!

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துக்குமரன் போட்டியிட்டு நல்லதொரு வெற்றியைப் பெற்றார்.
வெற்றி பெற்றதோடு மக்களை மறப்பதுதான் மக்கள் பிரதிநிதிகள் எனப்படும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோரின் வழக்கம். பெரிய பெரிய தலைவர்கள் முதல் சாதாரண எம்.எல்.ஏக்கள் வரை இதைத்தான் காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால் முத்துக்குமரன் வேறு மாதிரி இருந்தார்.
தொகுதி மக்களுக்காகவே உழைத்து வந்தார். தொகுதி மக்களின் உணர்வறிந்து, குறிப்பறிந்து, பிரச்சினை புரிந்து அதை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு சென்று நிவர்த்தி தேட முயன்று வந்தார்.
சட்டசபையில் அவர் பேசத் தொடங்கினால் நிறுத்த மாட்டார். ஆனால் யாரையும் புகழ்ந்து பாடி, போற்றி பாடி, புராணம் பாடி, கதை சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை அவர். தனது தொகுதி மக்களின் பிரச்சினைகளை மட்டுமே பேசுவார். தனக்குத் தேவையான பதில் கிடைக்கும் வரை அமைச்சர்களை விட மாட்டார். குரல் உயர்த்திப் பேச மாட்டார். கணிவான குரலில் பணிவாக தனது கோரிக்கைகளை வைப்பார். அதற்காக அவரை ஏதாவது பதில் சொல்லி சமாதானப்படுத்தி விடலாம் என்று எந்த மந்திரியாவது நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். தான் எதிர்பார்த்த பதிலைப் பெறும வரை அந்த மந்திரியை விட மாட்டார். இது முத்துக்குமரன் குறித்து சக எம்.எல்.ஏக்கள் சொன்னது.
அப்படிப்பட்ட ஒரு அருமையான மக்கள் பிரதிநிதியை இழந்துள்ளனர் புதுக்கோட்டை மக்கள். இது நிச்சயம் புதுக்கோட்டை மக்களுக்கு மிகப் பெரிய இழப்பு. காரணம், தங்களுக்காக உண்மையிலேயே பாடுபட்டு வந்த ஒரு மனிதனை, மிக மிகச் சாதாரணமான ஒரு மனிதனை இழந்து நிற்கிறார்கள் அவர்கள்.
இந்த சோகத்திலிருந்தே இன்னும் அவர்கள் மீளாத நிலையில், அடுத்து இங்கு இடைத் தேர்தல் வரப் போகிறது, அதையும் சங்கரன்கோவிலைப் போலவே நாம் தனியாக போட்டியிட்டு வெல்வோம் என்று அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. முகம் சுளிக்க வைப்பதாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பே வெளியாகாத நிலையில், இப்படி அதிமுக அமைச்சர் வந்து பேசியிருப்பது புதுக்கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது கூட்டணிக் கட்சி ஒன்று போட்டியிட்ட தொகுதியில் தானே போட்டியிடப் போவதாகவும், அதை சங்கரன்கோவிலைப் போல வெல்லப் போவதாகவும் அதிமுக கூறியிருப்பதுதான் அனைவரையும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.
சங்கரன்கோவிலில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்பது அதிமுகவினருக்கும், சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கும்தான் நன்றாகத் தெரியும். எனவே அதே போல இங்கும் வெல்வோம் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருப்பதைப் பார்த்தால் புதுக்கோட்டையில் விரைவில் அமைச்சர்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இழவு வீட்டுக்குள் உளவு பார்க்க வந்தது போல அமைந்துள்ளது ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு.
சங்கரன்கோவிலில் தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் கொண்டு போய்க் குவித்து, அதிகார பலத்தை முழுமையாக பயன்படுத்தி அதிமுகவுக்கு வெற்றித் தேடித் தந்தார் முதல்வர் ஜெயலலிதா. எனவே புதுக்கோட்டையிலும் அதேபோல அவர் முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் இந்த முடிவு குறித்து ஜெயலலிதாவை எதிர்ப்பதை கனவில் கூட விரும்பாதவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதும் தெரியவில்லை. சங்கரன்கோவிலில் போட்டியிடுவது வேஸ்ட் என்று கூறியவர் அவர். எனவே புதுக்கோட்டையில் போட்டியிடுவது போர் என்று கூறினாலும் கூறலாம்.
சங்கரன்கோவிலில் திமுக, தேமுதிக, மதிமுக என அத்தனைக் கட்சிகளும் தனித் தனியாக நின்று போட்டியிட்டதால், அனைவருமே படு தோல்வியைச் சந்தித்ததோடு, டெபாசிட்டையும் பறி கொடுத்தனர். புதுக்கோட்டையிலும் அப்படியே போட்டியிடுவார்களா அல்லது கூட்டாக சேர்ந்து அதிமுகவுக்கு சவால் விடுவார்களா என்பது தெரியவில்லை.
எப்படியோ, புதுக்கோட்டையில் விரைவில் இடைத் தேர்தல் களை கட்டும் என்பது மட்டும் நிச்சயம். விரைவில் சைரன் கார்கள் சரமாரியாக உலா வரும், அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள், அரசின் இலவசத் திட்டங்கள் இங்கு இனி வீறு கொண்டு எழும். புதுக்கோட்டை குறித்து இன்னும் சில காலத்துக்கு அரசு வட்டாரத்தில் அடிக்கடி அக்கறையுடன் பேசப்படும் என்பதில் மட்டுமே சந்தேகமில்லை.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications