கள்ளத் தோணியில் போனாலும் வைகோ,சீமானை சிங்களவன் அடிக்க மாட்டான்-ஈவிகேஎஸ்

திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது,
எதற்காக இவ்வளவு கூட்டம் ? ஏன் இந்த கூட்டம்? நாம் எந்த இலக்கு, எந்த லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம்? என்ற கேள்வி அனைத்து தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு யார், எங்கே, எப்படி இருக்க வேண்டும்? என்பது நமது மனதில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது. சொல்ல வேண்டிய இடத்தில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகியோர் உள்ளனர்.
என் தலைவர் ராஜீவ் கூறியது போல திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள். எங்களை அடமானம் வைத்து விடாதீர்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
நாம் சுயமரியாதையோடு அந்த இரு கட்சிகள் செய்த தவறுகளை தட்டிக்கேட்டு, மக்கள் பிரச்சனைகளை முன் வைத்துப் போராடினால் தான் நாம் மரியாதையாக இருக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு எதையும் சாதிக்கிற ஆற்றல் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்
கூடங்குளம் ஆறு மாதம் செயல்படாததால் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் மாணவர்களின் படிப்பும் வீணானது. ஏற்கனவே சமச்சீர் கல்வியைஅமல்படுத்துகிறேன் என்ற பெயரில் நான்கு மாதம் படிப்பு வீணானது. மின்வெட்டால் மூன்று மாத காலம் மாணவர்களின் படிப்பு வீணாகியிருக்கிறது.
இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்கள் தான். ஓராண்டு படிப்பு வீணானதால், நாட்டின் வளர்ச்சி ஓராண்டு பின் தங்கிவிடும். எனவே, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10 முதல் 20 மதிப்பெண்கள் வரை அதிகமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ, சீமான் போன்றவர்கள் காகிதப் புலிகள் என்பது சிங்களவனுக்கு தெரியும். கள்ளத் தோணியில் சென்றாலும் அவர்களை சிங்களவன் அடிக்க மாட்டான் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications