சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர்,கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்கு ரூ 2000 கோட
சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் குடிநீர் வழங்கவும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை மேற்கொள்வதற்காகவும் ரூ2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று கூறியதாவது:
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்ட 32 வார்டுகளில் ரூ.700 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் அந்த வார்டுகளில் ரூ.1300 கோடி செலவில் கழிவுநீர் அகற்றும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படும்.
அரக்கோணம், பழனி உள்ளிட்ட 22 நகரங்களில் ரூ.2355 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,197 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார் அவர்.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம்
174 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு கொண்ட சென்னை மாநகராட்சியை 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை புறநகரில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மணலி, கத்திவாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், ஆலந்தூர் உள்பட 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் 25 பஞ்சாயத்துகளை ஆகியவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications