மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி சுபஸ்ரீ நிரபராதி-ஒடிசா நீதிமன்றம்
குனுபூர்: இத்தாலியரை கடத்தி வைத்துள்ள மாவோயிஸ்டுகள் விதித்த நிபந்தனைப்படி முத்த மாவோயிஸ்ட் தலைவர் சபயசாசி பாண்டாவின் மனைவி சுபஸ்ரீயை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
2003-ம் ஆண்டு குடாரி காவல்நிலையம் மீதான தாக்குதல் வழக்கில் பாண்டாவின் மனைவி சுபஸ்ரீ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில் சுபஸ்ரீ உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்காக இத்தாலியர் இருவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
இருவரில் ஒருவரை மட்டும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்த மாவோயிஸ்டுகள் தங்களது பிரதிநிதிகள் மூலம் ஒடிசா மாநில அரசாங்கத்துடன் பேச்சுகளை நடத்தி வந்தனர்.
சுபஸ்ரீ உள்ளிட்டோரின் விடுதலையில் மாவோயிஸ்டுகள் உறுதியாக இருந்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் இடையில் தொய்வு ஏற்பட்டது. மேலும் மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய மாநில போலீசார் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சுபஸ்ரீ மீதான வழக்கை விசாரித்த குனுபூர் விரைவு நீதிமன்றம் அவரை இன்று விடுதலை செய்வதாக அறிவித்தது. இதனால் எந்த நேரத்திலும் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே கடத்தப்பட்ட எம்.எல்.ஏவை விடுக்க மாவோயிஸ்டுகள் கோரியிருந்தபடி 30 உறுப்பினர்களை விடுதலை செய்ய மாநில அரசு ஒப்புக் கொண்டது. மேலும் மாவோயிஸ்டுகள் விடுத்திருந்த கெடுவும் இன்றுடன் முடிவடைவதால் எம்.எல்.ஏவும் விடுக்கப்படக் கூடும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications