மதுரை தேமுதிக அலுவலகத்தை இடிக்க மாநகராட்சி முடிவு: நாக்கைத் துறுத்தும் தொண்டர்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 1 கிமீ தூரத்திற்கு 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது என்று 1997ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை கண்டுகொள்ளாமல் கோவிலைச் சுற்றி பல உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் இடிக்க மதுரை கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.
அதன்படி விதிகளை மீறி கட்டப்பட்ட 790 கட்டிடங்களை இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேல ஆவணி மூல வீதியில் உள்ள 3 அடுக்கு தேமுதிக கட்சி அலுவலகக் கட்டிடத்தையும் இடிக்குமாறு மதுரை மாநகராட்சி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 15ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் பதில் அளித்துள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, இந்தக் கட்டிடத்தை கடந்த 1987ம் ஆண்டு கேப்டன் அவரது பெயரில் வாங்கியுள்ளார். வெறும் நிலமாக வாங்கவில்லை. கட்டிடமாகவே வாங்கியுள்ளார். மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 1 கிமீ தூரத்திற்கு 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது என்று 1997ம் ஆண்டு தான் தமிழக அரசு உத்தரவிட்டது.
எங்களைப் பொறுத்த வரை காம்பவுண்ட் சுவறில் இரண்டு செங்கலை எடுத்துவிட்டாலே அரசு உத்தரவை அமல்படுத்தியதாகிவிடும். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அரசும், மாவட்ட நிர்வாகமும் என்ன சொல்கின்றதோ அதை சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த எங்கள் கேப்டன் உறுதியாக உள்ளார் என்றார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பத்தரிக்கைகளுக்கு யாரும் பேட்டியோ அல்லது பரபரப்பான தகவலையோ கொடுக்கக் கூடாது என கேப்டன் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் அமைதி காக்கும் கட்சி தொண்டர்கள் அண்ணன் வாய் கட்டை அவிழ்த்துவிடட்டும் அப்புறம் பாருங்கள் எங்கள் அதிரடியை என்று விஜயகாந்த் போலவே நாக்கை துறுத்துகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications